இலங்கை

வாகன இறக்குமதிக்கு 200 மில்லியன் டொலர் அனுமதி – நிபந்தனையால் விலை உயர வாய்ப்பு!

Published

on

வாகன இறக்குமதிக்கு 200 மில்லியன் டொலர் அனுமதி – நிபந்தனையால் விலை உயர வாய்ப்பு!

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

குறித்த 200 மில்லியன் டொலர்களை பயன்படுத்த நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படுமானால், அது உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வை ஏற்படுத்தும் என்று சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே எச்சரித்துள்ளார். 

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறக்குமதிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டன.

இதனடிப்படையில் வாகன இறக்குமதிக்காக சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள வங்கி நாணயக் கடிதங்களை நிதி நிறுவனங்கள் திறந்துள்ளன. 

Advertisement

இந்த நிலையில், மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டமிட்டபடி இறக்குமதிக்குக் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

எவ்வாறாயினும், வாகன இறக்குமதி குறித்த கவலைகளை, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.

எனினும் வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி வரம்பை நீக்குவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை  என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version