இலங்கை

விவசாயிகளின் ஓய்வூதிய சம்பளத்தில் புதிய சலுகை!

Published

on

விவசாயிகளின் ஓய்வூதிய சம்பளத்தில் புதிய சலுகை!

விவசாயிகள் ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக 75% அதிகமான தவணை கட்டணத்தை செலுத்தி உள்ள விவசாயிகளுக்காக அவ்வாறு செலுத்தப்படும் தவணைக் கட்டணத்திற்கு ஏற்ற சதவீதத்தில் ஓய்வூதிய சம்பளத்தை வழங்குதல் தொடர்பாக விவசாய அமைச்சர் கே. டி. லால்காந்த வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைவாக விவசாயிகளின் மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை 2025 ஜூலை மாதத்தில் இருந்து வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

 இது விவசாய ஓய்வூதியக் காரர்களுக்கு எந்த ஒரு அரசாங்கத்தினாலும் வழங்கப்படாத விசேட நிவாரணம் என இச்சபை குறிப்பிட்டது

Advertisement

1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விவசாய ஒய்வூதிய சம்பளம் மற்றும் சமூகப் பாதுகாப்பு யோசனை முறைமைக்காக 871,425 விவசாயிகள் பங்களிப்பு செய்துள்ளதுடன், அதில் 178,927 விவசாயிகள் 3989 தபால் நிலையங்கள் மூலம் தமது ஓய்வூதிய பணத்தை மாதாந்தம் பெற்றுக் கொள்கின்றனர்.

 2012-2013 காலப்பகுதியில் மேலும் விவசாய ஓய்வூதிய சம்பள நிதியத்திற்கு ஏற்பட்ட தலையீடுகள் காரணமாக ஓய்வூதிய சம்பளத்தை செலுத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதற்கு அமைய விவசாய ஓய்வூதிய சம்பளம் யோசனை முறைமைக்கு பங்களிப்புச் செய்துள்ள விவசாயிகள் பிற்படுத்திய தவணைகளை அளவிடும் செயற்பாடு தடைப்பட்டது.

 குறித்த நிலைமைகளின் காரணமாக இந்த யோசனை முறைமையின் கீழ் பங்களிப்பை வழங்கியுள்ள விவசாயிகளுக்கு தவணை கட்டடங்கள் முறையாக செலுத்துவதற்கு முடியாமல 60 வயது பூர்த்தியாகும் போது இரண்டு பருவாங்களில் தொடர்ச்சியாக, (சிறு மற்றும் பெரும் போகம்) 2 ½ வருடங்களுக்குள் 05 தவணைகள் குறித்த திகதிக்கு செலுத்தப்படாமை அடிப்படையில் செலுத்தப்பட வேண்டிய மொத்த தவணைக் கட்டணத்தில் 75% விதத்துக்கு குறையாத தவணைகள் செலுத்தப்பட்டும் ஆனால் சம்பள உரிமை இழக்கப்பட்டிருந்தது.

Advertisement

 இது தொடர்பாக விவசாய சமூகம் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தி 75% அதிகமான தவணைப் பணம் விவசாயிகளின் ஓய்வூதிய சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்காக செலுத்தப்பட்டுள்ள விவசாயிகளுக்காக இவ்வாறு விவசாய ஓய்வூதிய சம்பளம் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் தயாரிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version