இலங்கை

வெளிநாட்டில் உள்ள பிள்ளையானின் சகாக்களை தேடும் CID

Published

on

வெளிநாட்டில் உள்ள பிள்ளையானின் சகாக்களை தேடும் CID

சிவனேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தீவிரமானதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிள்ளையானின் நெருங்கிய சகா ஒருவரையும் சிஐடி கைது செய்திருந்தனர்.

தற்போது உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதை அடுத்து தொடர்ச்சியாக மேலும் பல கைதுகள் இடம்பெறும் எனவும், வெளிநாட்டில் உள்ள பிள்ளையானின் சகாக்களும் கைது செய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

[NAZFDG
]

அண்மைய காலங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் வெளியாகின்ற நிலையில் நேற்றைய நாடாளுமன்ற அமர்விலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பலதரப்பபட்ட விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே நன்கு அறிந்திருந்தாகவும், சிறையில் அவர் இருக்கும்போதே இதனை அறிந்து வைத்திருந்தார் என்பதற்கான தகவல்களும் உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் வேளையில், அதில் சதித்திட்டம் ஒன்று உள்ளமை தொடர்பில் கண்டுபிடிக்க, தற்போது நீண்ட விசாரணை ஒன்று நடைபெற்று வருகின்றது. அதனால் குறுகிய காலத்தில் நீதிமன்றத்துக்கு பல விடயங்கள் முன்வைக்கப்படும்” என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான பல விரிவான தகவல்களை உள்ளடக்கியுள்ளது குறித்த காணொளி, 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version