இலங்கை
வைத்தியர் மஹேஷியின் மகளுக்கு பிணை
வைத்தியர் மஹேஷியின் மகளுக்கு பிணை
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நரம்பியல் வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள், இன்று (09) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கில் விசாரணை முன்னெடுக்கப்பட்டபோது, குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரங்களை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபருக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்க உத்தரவிட்டது.
அச்சுறுத்தல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.