சினிமா

ஸ்ரீதேவி உடனான உறவு, கணவன் மனைவி என வந்த செய்திகள்.. கமல் ஹாசன் ஓபன் டாக்

Published

on

ஸ்ரீதேவி உடனான உறவு, கணவன் மனைவி என வந்த செய்திகள்.. கமல் ஹாசன் ஓபன் டாக்

சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் நடிகர் கமல் ஹாசன் ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் அரசியல் என இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தக் லைஃப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. நெட்டிசன்கள் இப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்தனர்.அடுத்ததாக இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பும் வெளிவரும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.கமல் – ஸ்ரீதேவி நடிகர் கமல் ஹாசன் பல நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்திருந்தாலும், திரையில் கமல் – ஸ்ரீதேவி ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகவும் அழகாக மற்றும் பொருத்தமாகவும் இருக்கும். இந்த நிலையில் பழைய பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவி உடனான உறவு குறித்து கமல் வெளிப்படையாக பேசியுள்ளார்.”என்னையும், ஸ்ரீதேவியும் சேர்த்து வைத்து பல கிசுகிசு செய்திகள் வந்தன. ஆனால், அதெல்லாம் உண்மையே இல்லை. எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே அண்ணன் தங்கை போன்ற உறவு தான். என்னுடைய மேனரிசமும், ஸ்ரீ தேவியின் மேனரிசமும் ஒன்றாக இருக்கும். ஸ்ரீதேவியுடனும் நான் ஸ்ரீவித்யா உடன் பழகிய மாதிரியேதான் பழகினேன் என்று கூறுவார்கள்.ஆனால், அது உண்மையே கிடையாது. நான் அவங்க பக்கத்துல போயிட்டு மொறச்சாலே பயந்துடுவாங்க. ஸ்ரீதேவி படப்பிடிப்பில் என்ன சார் என்றுதான் அழைப்பாங்க. நாங்கள் இப்படித்தான் பழகினோம். எங்களுக்கு இடையே உறவு இப்படித்தான் இருந்தது. ஆனால், வெளியில் நாங்கள் இருவரும் கணவன் மனைவி என பல செய்திகள் வந்தது. அது அப்படி இல்லை என்று னான்காண் சொன்னாலும் யாரும் அதை நம்பவில்லை” என கமல் ஹாசன் கூறியுள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version