இலங்கை
2 வாரங்கள் சியா விதை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
2 வாரங்கள் சியா விதை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
உங்கள் உணவு ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை பாதுகாக்க விரும்பினால் நீங்கள் உணவு முறையில் சியா விதைகளை சேர்க்க வேண்டும். தொடர்ந்து 2 வாரங்கள் சியா விதைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் மாற்றங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
நீரிழப்பு உடலில் பல பிரச்சனைகளை உண்டு செய்கிறது. உடல் நச்சுக்கள் வெளியேற்ற முடியாமல் போகலாம், ஆற்றல் இல்லாமல் உடல் சோர்வை எதிர்கொள்ளலாம்.
சிறுநீரக கோளாறு உண்டு செய்யலாம். இப்படி பல பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த சியா விதைகள் சாப்பிடுவது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
உங்களுக்கு செரிமானத்தொல்லை அவ்வப்போது இருந்தால் நீங்கள் தொடர்ந்து 2 வாரங்கள் சாப்பிடும் போது உங்களுக்கு இந்த அஜீரண கோளாறு மாற்றங்கள் குறைவதை பார்க்கலாம்.
மேலும் செரிமான இயக்கம் சீராக இருந்தால் குடல் இயக்கங்கள் சீராக இருக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்
நீங்கள் எடை இழப்புக்கு முயற்சிக்கும் போது அடிக்கடி பசி உணர்வு இருந்தால் நீங்கள் சியா விதைகளை முயற்சிக்கலாம். தொடர்ந்து 2 வாரங்கள் சியா விதைகள் சாப்பிடுவதன் மூலம். உங்கள் பசி உணர்வு கட்டுக்குள் இருக்கும்.