இலங்கை
2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ச வேட்பாளர்; மொட்டுக்கட்சி கூறுகின்றது
2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ச வேட்பாளர்; மொட்டுக்கட்சி கூறுகின்றது
2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாட்டைப் பொறுப்பேற்பதற்குத் தகுதியான இளம் தலைவராக நாமல் ராஜபக்ச திகழ்கின்றார். அவரே எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். பொய்கூறி ஆட்சியைப் பிடித்தாலும் பொய்கூறி ஆட்சியை நடத்தமுடியாத நிலை தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது. மொட்டுக் கட்சியின் வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்குச் சென்றன. அடுத்த தேர்தலில் எம்மால் வெல்லமுடியும் என்றார்.