பொழுதுபோக்கு
5 ஆண்டுகளில் 61 படங்கள்; 24 வயதில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் நடிகை: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!
5 ஆண்டுகளில் 61 படங்கள்; 24 வயதில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் நடிகை: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!
தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக திகழ்ந்த, ராணி பத்மினியை இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன்படி, ராணி பத்மினியின் வாழ்க்கை பின்னணியை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் 1962 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அண்ணா நகரில் சௌத்ரி மற்றும் இந்திரா குமாரிக்கு ராணி பத்மினி பிறந்தார். அவர் பிறக்கும் முன்னரே அவரது சினிமா விதி எழுதப்பட்டிருந்தது. ஒரு திரைப்பட நட்சத்திரமாக வேண்டும் என்ற தனது சொந்த ஆசைகள் மற்றும் அந்த கனவைத் தேடி சென்னைக்கு குடிபெயர்ந்த போதிலும், இந்திரா குமாரியால் அதை அடைய முடியவில்லை. டப்பிங் கலைஞராக பணிபுரியும் போது, சௌத்ரி மூலமாக ராணியை பெற்றெடுத்தார். ராணி சென்னையிலேயே பிறந்து, வளர்ந்தார். இந்திரா தொடர்ந்து சினிமாவில் நுழைய முயற்சி செய்தாலும், அவர் வெற்றியடையவில்லை. இதனால், தனது மகளாவது தன்னால் அடைய முடியாததை அடைய வேண்டும் என்ற கனவு, இந்திராவின் உந்துதலாக மாறியது.மனோரமா ஆன்லைன் தளத்தின் படி, ராணி பதின்ம வயதை அடைந்ததும், இந்திரா தனது மகளுடன் மும்பைக்குச் சென்றார். ராணி பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. இருப்பினும், அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. பின்னர் இந்திரா தனது மகளை மீண்டும் இங்கே அழைத்து வந்து வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். விரைவில், இயக்குநர் மோகனின் ‘கதயாரியாதே’ (1981) மூலம் மலையாளத்தில் ராணி அறிமுகமானார். அதே ஆண்டு, ‘தேனும் வயம்பும்’, ‘துஷாரம்’, ‘பராங்கிமலை’ போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும், ‘சங்கர்ஷம்’ (1981) படத்தில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார்1981 மற்றும் 1986 க்கு இடையில், ராணி பத்மினி தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் சுமார் 61 படங்களில் நடித்தார். குறிப்பாக, ‘ராஜதந்திரம்’, ‘நிரபராதி, ‘பக்கத்து வீட்டு ரோஜா’ போன்ற தமிழ் படங்களில் நடித்தார். போதுமான செல்வமும் புகழும் கிடைத்தவுடன், தாய்-மகள் இருவரும் அண்ணா நகரில் உள்ள 18வது அவென்யூவில் ஒரு ஆடம்பர பங்களாவை வாடகைக்கு எடுத்து அங்கு குடியேறினர். நிதி ரீதியாக பாதுகாப்பாக உணர்ந்த அவர்கள், வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிக்க முடிவு செய்தனர். இந்த முடிவு அவர்களின் வாழ்க்கையை மாற்றும் என்று அவர்கள் அறியவில்லை.வாட்ச்மேன், சமையல்காரர் மற்றும் ஓட்டுநர் ஆகிய மூன்று பணிகளுக்கு முன்னணி செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தனர். முதலில் ஜெபராஜ் என்பவ அவர்களின் ஓட்டுநரானார். தி இந்து செய்தியின் படி, மேலும் இரண்டு பேர் இணைந்தனர். லட்சுமி நரசிம்மன் மற்றும் கணேசன் ஆகியோர் வாட்ச்மேன் மற்றும் சமையல்காரராக பணிக்குச் சேரதனர்.ராணி பத்மினி மற்றும் இந்திரா குமாரி இருவரும், 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி பிற்பகலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்ததால், அவர்களது உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. கொலைகளைத் தவிர, ராணி மும்பையில் வாங்கிய ஒரு இறக்குமதி செய்யப்பட்ட நிசான் காரும் திருடு போனது கண்டறியப்பட்டது. மேலும் ஓட்டுநர் மற்றும் வீட்டு உதவியாளரும் காணாமல் போயிருந்தனர். அவரும், அவரது தாயாரும் பங்களாவை விலைக்கு வாங்க தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில், ஒப்பந்தத்தை இறுதி செய்யவிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்திராவின் சகோதரர் வரும் வரை, அவர்களது உடல்கள் 10 நாட்களுக்கு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் உரிமை கோரப்படாமல் இருந்தன.விசாரணையின் போது, பணத்திற்காக ஜெபராஜ், லட்சுமி நரசிம்மன் மற்றும் கணேசன் ஆகிய மூவரும் கொடூரமாக கொலை செய்ததாக போலீசார் முடிவு செய்தனர். நடிகையும், அவரது தாயும் எந்தவிதமான சோதனையும் இல்லாமல் அவர்களை பணிக்கு நியமித்திருந்தனர். ஜெபராஜ் பல வாகன திருட்டு வழக்குகளுடன் தொடர்புடையவர். அதைத் தவிர, ராணியுடன் தவறாக நடந்து கொண்டதற்காக இந்திரா, ஜெபராஜை அறைந்து, மீண்டும் வேலைக்கு வரக்கூடாது என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இது விரோதத்தை உருவாக்கி, மற்ற இருவருடன் சதி செய்யத் தூண்டியது.சம்பவத்தன்று அன்று, ராணியும் இந்திராவும் பங்களா ஒப்பந்தத்திற்காக வங்கியில் பணம் எடுத்திருந்தனர். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட மூன்று பேரும், அவர்களைக் கொன்று பணத்தையும், நகைகளையும் பங்கிட முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மனோரமா ஆன்லைன் செய்தியின் படி, இந்திராவும், ராணியும் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தனர், அந்த கொடூரமான இரவிலும், அவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு மது அருந்தினர். மறுநாள் காலை, ராணி பசியுடன் எழுந்ததும் சமையலறைக்குச் சென்றார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஜெபராஜ், மறைந்திருந்து இந்திராவைக் கத்தியால் குத்தி கொன்றார். தனது தாயின் அலறல் சத்தத்தைக் கேட்டு ராணி ஓடி வந்து, அந்த காட்சியைக் கண்டு அதிர்ந்தார். அவர் தப்ப முயன்றார். எனினும், அவரும் படுகொலை செய்யப்பட்டார். ராணியின் உடலில் 12 காயங்களும், அவரது தாயாரின் உடலில் 14 காயங்களும் காணப்பட்டன.குற்றவாளிகள் முதலில் தப்பியோடினாலும், இறுதியில் கைது செய்யப்பட்டனர். மார்ச் 1989 இல், ஒரு மாவட்ட அமர்வு நீதிமன்றம் ராணி பத்மினி மற்றும் அவரது தாயைக் கொன்றதற்காக அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் லட்சுமி நரசிம்மன் மற்றும் கணேசன் ஆகியோரை விடுவித்து, ஜெபராஜின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் இறுதியில் லட்சுமி நரசிம்மனின் கொலைக் குற்றத்தை உறுதி செய்தது. இருப்பினும் அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. கணேசன் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு காணாமல் போனார். இறுதியில், லட்சுமி நரசிம்மன் 2008 ஆம் ஆண்டளவில் ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்ததால், மாநில திட்டத்தின் கீழ் முன்கூட்டியே விடுதலைக்கு தகுதியுடையவராக இருந்ததால் விடுவிக்கப்பட்டார். ஜெபராஜ் சிறையில் இறந்ததாகக் கூறப்படுகிறது.