இலங்கை
67 பேரின் உயிரைக் காத்த நாய்; ஹிமாச்சல நிலச்சரிவில் அதிசயம்!
67 பேரின் உயிரைக் காத்த நாய்; ஹிமாச்சல நிலச்சரிவில் அதிசயம்!
ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20 ஆம் திகதி முதல் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, கனமழை பெய்து வந்தது.
இந்நிலையில், நாய் ஒன்று குரைத்ததன் மூலம், அந்த பகுதியில் இருந்த 67 பேர் நிலச்சரிவில் இருந்து காப்பாற்றப்பட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 30 ஆம் திகதி இரவு 1 மணியளவில், மண்டி மாவட்டத்தின் சியாந்தி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்குள்ள வீடுகள் தரைமட்டமானது.
இது குறித்து பேசிய அந்த பகுதியை சேர்ந்த நரேந்திரா கூறுகையில்,
“நள்ளிரவில் 2வது தளத்தில் இருந்த எனது நாய் குறைக்க ஆரம்பித்தது.
நான் அங்கு சென்று பார்த்த போது, சுவற்றில் விரிசல் ஏற்பட்டு அது வழியாக தண்ணீர் உள்ளே வந்து கொண்டு இருந்தது.
உடனடியாக கீழே இருந்தவர்களை எழுப்பி வெளியேற சொன்னேன்.
மேல கிராமத்தில் உள்ள மற்றவர்களையும் எழுப்பி வெளியேறுமாறு அறிவுறுத்தினேன். நாங்கள் கிளம்பிய சிறுது நேரத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் நாயின் உதவியல் உயிர் தப்பினோம் என கூறியுள்ளார்.