சினிமா
7 வருடமாக வாய்ப்பு இல்லாம இருந்தேன்..! மனமுடைந்தே போயிட்டேன்! – உண்மையை சொன்ன விஷ்ணு!
7 வருடமாக வாய்ப்பு இல்லாம இருந்தேன்..! மனமுடைந்தே போயிட்டேன்! – உண்மையை சொன்ன விஷ்ணு!
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் விஷ்ணு விஷால். ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் கதாநாயகனாக சிறந்த வரவேற்பு பெற்ற அவர், இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்திருந்தார். ஆனால், இந்த வெற்றியை அடைய அவர் பல கஷ்டமான பாதைகளைக் கடந்துள்ளதாக சமீபத்திய நேர்காணலில் உணர்வுபூர்வமாக கதைத்துள்ளார்.அதன்போது விஷ்ணு விஷால், “விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படம் ஆரம்பத்தில் என்னை வைத்து எடுக்கவே திட்டமிட்ட படம். ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்தது. ஆனால், ஒரு காரணமும் இல்லாமல், அதிலிருந்து என்னை விலக்கிவிட்டார்கள். என்னுடைய பங்கு பறிக்கப்பட்டது.”அதற்குப் பிறகு, பரத்தின் “காதல்” படத்திலும் முக்கிய கதாபாத்திரம் எனக்கு சொல்லப்பட்டது. ‘அதை நீங்கள் தான் நடிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். ஆனால், சில வாரங்களுக்கு பிறகு அதில் இருந்து எனது பெயரே இல்லாமல் போய்விட்டது. இது கூட என் நம்பிக்கையையே உடைத்துவிட்டது. பின் 7 வருடங்களுக்குப் பிறகே வெண்ணிலா கபடி குழு மூலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.” என்றார். இந்த கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.