சினிமா

I Love Youன்னா என்னனு தெரியாமலேயே காதலிச்சேன்.! முதல் காதலை வெளிப்படையாக கூறிய அனுஷ்கா!

Published

on

I Love Youன்னா என்னனு தெரியாமலேயே காதலிச்சேன்.! முதல் காதலை வெளிப்படையாக கூறிய அனுஷ்கா!

தென்னிந்திய திரையுலகில் தனது அழகு, நடை மற்றும் திறமைகளால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, தற்போது ஒரு பேட்டியில் தனது முதல் காதல் குறித்து உணர்ச்சிகரமாக பகிர்ந்திருந்தார். அந்த உரையாடல், இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அன்பும் ஆச்சரியமும் கலந்த ஒரு பாசமான நினைவாக தனது குழந்தைப் பருவ காதல் அனுபவத்தை பகிர்ந்த அவர், “I LOVE YOU” என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை கூட அறியாத வயதில் ஒரு பையனின் அன்பை ஏற்றுக்கொண்டேன் என அழகாக விவரித்திருந்தார்.அதன்போது அனுஷ்கா, “நான் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஒரு பையன் என்னை உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறினான். ஆனால் ‘I LOVE YOU’ என்பதன் அர்த்தம் புரியாத வயதிலும் அந்தக் காதலை ஏற்றுக் கொண்டேன். அது ஒரு அழகான நினைவாக இப்போதும் உள்ளது.” எனக் கூறியிருந்தார். அனுஷ்காவின் இந்த சிறிய அனுபவக் கதையை கேட்டு நெஞ்சம் நிறைந்த ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளையும், நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் பலரும் தங்களது முதல் காதலை நினைத்து நெகிழ்ச்சியடைந்து கொள்கிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version