இலங்கை

அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Published

on

அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தீவகக் கல்வி வலயத்துக்குட்பட்ட வகை 2 மற்றும் வகை 3 ஆகிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு மூன்று வருடங்களுக்கு சேவையாற்றக்கூடிய இலங்கை அதிபர் சேவை தரம் 2, தரம் 3 ஆகியவற்றைச் சேர்ந்த அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வகை 2 ஐச் சேர்ந்த எழுவைதீவு முருகவேள் வித்தியாலயம், வேலணை சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் வகை 3 ஐச் சேர்ந்த வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாலயம், சரவணை சின்னமடு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, புங்குடுதீவு இராஜராஜேஸ்வரி த.க.பாடசாலை ஆகியவற்றில் வெற்றிடமாகக் காணப்படும் அதிபர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவத்தினை வலய நிர்வாகப் பகுதியில் பெற்றுப் பூர்த்தி செய்து ஜூலை 17ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்விப்பணிப்பாளர், வலயக்கல்வி அலுவலகம், வேலணை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு வலயக்கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version