சினிமா
ஆகாஷுடன் மனம்விட்டு கதைத்த இனியா! பொங்கியெழுந்த நிதீஷ்! தாங்க முடியாத துக்கத்தில் பாக்கியா
ஆகாஷுடன் மனம்விட்டு கதைத்த இனியா! பொங்கியெழுந்த நிதீஷ்! தாங்க முடியாத துக்கத்தில் பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா எழிலைக் கூப்பிட்டு நிதீஷ் வீட்ட என்ன நடந்திச்சு என்று கேட்கிறார். மேலும் நிதீஷோட அப்பா ஹோட்டலுக்கு வந்திருந்தாரு என்று சொல்லுறார். அதைக் கேட்ட இனியா அவர் எதுக்கு உன்னோட ஹோட்டலுக்கு வரணும் என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியா வீட்டு ஆம்பிளைங்கள விட்டு மிரட்டுறீங்களா உங்க பொண்ணு வாழ்க்கையை பற்றி கவலை இல்லையா என்று கேட்க வந்திருந்தாரு என்று சொல்லுறார்.அதனை அடுத்து எழில் நாங்க நிதீஷோட கதைக்க தான் போனோம் ஆனா அவன் ஓவரா பண்ணினான் அதுதான் அவனை அடிச்சோம் என்கிறார். அதுக்கு பாக்கியா பேச்சு வார்த்தையோட நிறுத்தியிருக்கலாமே என்கிறார். இதனைத் தொடர்ந்து இனியா இதுக்கெல்லாம் divorce தான் ஒரே முடிவு என்கிறார். மேலும் ரெஸ்டாரெண்டையும் திரும்ப வாங்கணும் என்கிறார். அதனை அடுத்து பாக்கியா இனியாவப் பார்த்து நீ நல்லா இருக்கிறீயா என்று கேட்கிறார். அதுக்கு இனியா நான் வேலையை பற்றி மட்டும் தான் ஜோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்லுறார். மறுநாள் பாக்கியா வீட்டில இருந்த எல்லாரும் divorce பண்ணுறதுக்காக advocate வீட்ட போறார்கள். அங்க செழியன் divorce ஈஸியா கிடைச்சிருமா என்று கேட்கிறார். அதுக்கு judge அது கொஞ்சம் கஷ்டம் தான் என்கிறார். பின் செல்வி பாக்கியாவ பார்த்து வக்கீலை பார்த்தீங்களா என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியா வக்கீலை பார்த்து எல்லாம் கதைச்சாச்சு என்கிறார். இதனை அடுத்து பாக்கியா செல்விக்கு இனியாவப் பற்றி சொல்லி அழுதுகொண்டிருக்கிறார். பின் இனியா ஹோட்டலுக்குப் போய் நிற்கிறார். அங்க இனியாவும் ஆகாஷும் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த நிதீஷ் கோபப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.