இலங்கை

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை ; விலையை கேட்டு அதிரும் நெட்டிசன்கள்

Published

on

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை ; விலையை கேட்டு அதிரும் நெட்டிசன்கள்

பிரபல ஃபேஷன் பிராண்டான லூயிஸ் உய்ட்டன் (LOUIS VUITTON) நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் விலை ரூ.35 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து இந்த கைப்பை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான ஆட்டோக்களை வாங்கி விடலாம் என இந்த பையை இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton) என்பது பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கி வரும் பிரபல பேஷன் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகும்.

Advertisement

இந்த நிறுவனம், உலகளவில் 50 நாடுகளில், 460 க்கும் மேற்பட்ட கடைகளுடன் செயல்பட்டு வருகிறது.

2026 தொகுப்பிற்காக, பல்வேறு வகையான கைப்பைகளை லூயிஸ் உய்ட்டன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், ஆட்டோ ரிக்சா வடிவிலான கைப்பை, இணையத்தையும் ஃபேஷன் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

மோனோகிராம் கேன்வாஸ் தோலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கைப்பையின் விலையை கேட்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லூயிஸ் உய்ட்டனின் தயாரிப்புகள் அனைத்தும், சிறந்த தரம் மற்றும் செயல்திறனுடன் உயர்தரப் பொருட்கள் கொண்டு, மிகுந்த அனுபவம் வாய்ந்த கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version