இலங்கை

இந்தியாவில் நிலநடுக்கம்; அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

Published

on

இந்தியாவில் நிலநடுக்கம்; அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

  இந்தியாவில் புதுடில்லியில் இன்று (10) காலையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஹரியானாவின் ஜஜ்ஜருக்கு வடகிழக்கே 3 கிமீ தொலைவிலும், டெல்லிக்கு மேற்கே 51 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

Advertisement

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், இன்று காலை கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

இதனால் மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக கூறப்படுகின்றது.

Advertisement

அதேவேளை நொய்டா பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஹரியானாவில், குருகிராம், ரோஹ்தக், தாத்ரி, ஃபரிதாபாத், சோனிபட் மற்றும் பகதூர்கர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும், ஜஜ்ஜாரில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் மற்றும் ஷாம்லி வரை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டால், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், அந்தச் சமயத்தில் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆலோசனை வழங்கியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version