இலங்கை
இனந்தெரியாத கும்பல் வீட்டின் மீது தாக்குதல்!
இனந்தெரியாத கும்பல் வீட்டின் மீது தாக்குதல்!
கொக்குவில் கிழக்கில் உள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று கற்கள் மற்றும் கூரிய கம்பிகளால் வீடு மற்றும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது தாக்குதல் நடத்திச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கோப்பாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.