பொழுதுபோக்கு
இறந்த கணவருக்காக இப்படியா? எனக்கு ரொம்ப பிடித்த படம் இதுதான்: ஆச்சி மனோரமா த்ரோபேக் வீடியோ!
இறந்த கணவருக்காக இப்படியா? எனக்கு ரொம்ப பிடித்த படம் இதுதான்: ஆச்சி மனோரமா த்ரோபேக் வீடியோ!
தமிழ் சினிமாவின் பிரியமான “நகைச்சுவை ராணி” மனோரமா, 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வறுமையில் இருந்து எழுந்த அவர், பல தசாப்தங்களாகத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தார் என்று சொல்லலாம். இவரது எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனங்களை வென்றார். மனோரமாவின் நடிப்பு திறமைக்கு தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் போன்ற பட்டங்களும் கிடைத்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனையும் வாங்கியிருக்கிறார். 5000 மேடை நாடகங்களில் நடித்துள்ளார். எக்கச்சக்கமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா. அவரை பலரும் ஆச்சி மனோரமா என்றும் அழைப்பதுண்டு. இந்நிலையில், தான் ஏராளமான படங்களில் நடித்து இருந்தாலும், தனக்கு மிகவும் பிடித்த படம் ‘சின்ன கவுண்டர்’ என்று ஆச்சி மனோரமா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனக்கு ஏன் அப்படம் அதிகம் பிடிக்கும் என்பது குறித்தும் அவர் கூறியிருப்பார். கடந்த 1992 ஆம் ஆண்டு வெளிவந்த சின்ன கவுண்டர் படத்தில் ஜாம்பவான் நடிகரான விஜயகாந்த் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சுகன்யா நடித்திருப்பார். இளையராஜா இசையமைக்க, ஆர். வி. உதயகுமார் படத்தை இயக்கி இருப்பார். பொங்கலை ஒட்டி வெளியான இந்தப் படம் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது. இன்றளவும் டி.வி ஒளிபரப்பாகும் போது அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். இப்படம் தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது.சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்தின் தாயாராக ஆச்சி மனோரமா நடித்திருப்பார். அவரது பல் சற்று வித்தியாசமாக இருக்கும். அதனை கவுண்டமணி செந்தில் உடனான காமெடி சீனில் சற்று கலாய்த்து விடுவார். அந்த பல் அணிந்து இருந்தது தனது கஷ்டமாக இருந்தாலும், தான் அந்தப் பாத்திரத்தை விரும்பி நடிப்பதாகவும் ஆச்சி மனோரமா அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். “சின்ன கவுண்டர் படத்தின் கதையை ஆர். வி. உதயகுமார் சொல்லும் போது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அது ஒரு அற்புதமான கதை என்று சொல்லலாம். படத்தில் நான் நடிக்கும் பாத்திரத்தின் கணவர் இருந்து விடுகிறார். அவரை ஒரு வயலில் புதைத்து இருக்கிறார்கள். அந்த வயலை இந்த அம்மா தான் உழுது, நாற்று நட்டு விவசாயம் போடுகிறார். ஆனால், கதிர் அறுக்கும் போது, தனது கால் தரையில் படாதவாறு முட்டி போட்டுக் கொண்டே அறுக்கிறார். அந்த சீசன் எனக்கும் மிகவும் பிடித்து இருந்தது. நெல் அறுக்கும் போது நான் ஒரு பாடல் பாடுவேன்.” என்று ஆச்சி மனோரமா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.