இலங்கை
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் (ஜூலை 1 முதல் 6 வரை) 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,204,046 ஆக உள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்தனர்.
இந்த ஆண்டு, முந்தைய ஆண்டை விட வேகமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சுற்றுலாத் துறையில் மீட்சியை பிரதிபலிக்கிறது.
ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட தரவுகளின்படி,
இந்தியாவிலிருந்து 8,053 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்,
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,562 பேர், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,674 பேர், மற்றும் சீனாவிலிருந்து 2,362 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.