இலங்கை
இலங்கையில் பயன்படுத்தப்படும் கிறீம் மற்றும் வாசனை திரவியங்கள் தொடர்பில் வெளியான எச்சரிக்கை!
இலங்கையில் பயன்படுத்தப்படும் கிறீம் மற்றும் வாசனை திரவியங்கள் தொடர்பில் வெளியான எச்சரிக்கை!
இலங்கையில் முகப்பூச்சு கிறீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோருக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சோதனையின் போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 35 வகையான கிறீம்கள் உட்பட 4079 வாசனை திரவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் தகவல் இல்லாத வழங்குநர்களிடம் இருந்து பொருட்களை வாங்க வேண்டாம் எனவும் அத்தகைய பொருட்களை விற்பனைக்கு வழங்க வேண்டாம் எனவும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிகாரசபை அறிவித்துள்ளது.
மேலும், அத்தகைய பொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை