இலங்கை
ஈஸ்டர் தாக்குதல்தாரி தொடர்பில் துல்லிய தகவல் வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை!
ஈஸ்டர் தாக்குதல்தாரி தொடர்பில் துல்லிய தகவல் வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை!
தற்கொலைக் குண்டுதாரி தொடர்பில் ஹோட்டல் நிர்வாகத்தால் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம்திகதி புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்குள் தாக்குதல் நடத்த முற்பட்ட தற்கொலை குண்டுதாரி அப்துல்லதீப் ஜமில் மொஹமட், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியே அதாவது தாக்குதல் சம்பவத்துக்கு முதல் நாளே ஹோட்டலுக்கு வந்துள்ளார். மாலை 4.52 மணிக்கு ஹேட்டலுக்குள் சென்றுள்ளார். ஹோட்டல் முகாமைத்துவத்தால் தாக்குதலுக்கு முன்னதாக இதுபற்றி அரச புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நபர் 2017ஆம் ஆண்டிலிருந்து அடிப்படைவாதச் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் அரச புலனாய்வு சேவை மற்றும் இதர புலனாய்வு சேவைகளால் விசாரணைகள் இடம்பெற்றுவந்தன. அதனால் தான் ஹோட்டல் நிர்வாகத்தில் ஏப்ரல் 20ஆம் திகதியே தகவல் வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தகவல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் தாக்குதலைத் தடுத்திருக்கலாம். இது பாரதூரமான விடயமாகும். இது பற்றியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன – என்றார்.