இலங்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சுயாதீன விசாரணை அவசியம்; எதிர்க்கட்சி வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சுயாதீன விசாரணை அவசியம்; எதிர்க்கட்சி வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இவ்வாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
அசாத் மெளலானா என்ற நபரை பிரான்ஸில் இருந்து நாட்டுக்கு அழைத்துவந்து விசாரிக்கமுடியாதா? அல்லது இங்கிருந்து அதிகாரிகள் குழுவொன்றை விசாரணைக்கு அனுப்பமுடியாதா? இதற்குரிய நடவடிக்கை ஏன் இடம்பெறவில்லை? எதற்காக தாமதம்? யாரைப் பாதுகாக்க அரசாங்கம் முற்படுகின்றது? நீதிக்காக சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்- என்றார்.