இந்தியா
கடலூர் விபத்து எதிரொலி: ரயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாம் – ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு
கடலூர் விபத்து எதிரொலி: ரயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாம் – ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு
அண்மையில் கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே கேட் மேலாண்மை குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை (ஜூலை 9) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ரயில்வே லெவல் கிராசிங்குகளில் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.புதிய நடைமுறைகளின்படி, அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே கேட் கீப்பர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல் பதிவுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், கூடுமானவரை அனைத்து இடங்களிலும் இன்டர்லாக் சிஸ்டம் பொருத்தப்பட வேண்டும். குறிப்பாக, ரயில் வாகனப்பிரிவு 10 ஆயிரத்திற்கும் மேல் உள்ள ரயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர்லாக் அமைக்கப்படும். இது தவிர, அனைத்து ரயில்வே கேட்டுகளையும் 15 நாட்களுக்குள் ஆய்வு செய்ய ஒரு பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், ரயில்வே கடக்கும்போது ஏற்படும் விபத்துகளைக் குறைத்து, பயணிகளின் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.