வணிகம்

கிரெடிட் கார்டுகள் வைத்திருந்தால் இவ்வளவு நன்மைகளா? இதை செக் பண்ணுங்க மக்களே!

Published

on

கிரெடிட் கார்டுகள் வைத்திருந்தால் இவ்வளவு நன்மைகளா? இதை செக் பண்ணுங்க மக்களே!

கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலர் மேலும் சில கிரெடிட் கார்டைப் பெற விரும்புவது சகஜம். இது ஒரு நல்ல முடிவா, பல கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இப்பதிவில் விரிவாகப் பார்ப்போம்.பல கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில், உங்கள் கடன் வரம்பை (Credit Limit) அதிகரிக்க விரும்பலாம். மேலும் சில நேரங்களில், சிறந்த சலுகைகள் மற்றும் வெகுமதிகளை (Rewards and Offers) பெற விரும்பலாம்.பல கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பது எப்போது பலன் அளிக்கும்?பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதற்கான முக்கிய காரணம், அதிக கடன் வரம்பை பராமரிப்பதாகும். உதாரணமாக, தலா ரூ. 5 லட்சம் வரம்பு கொண்ட இரண்டு கார்டுகள் வைத்திருந்தால், உங்கள் மொத்த கடன் வரம்பு ரூ. 10 லட்சமாக இருக்கும். இது நிதி நெருக்கடி காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஒவ்வொரு கார்டும் ஒரு தனிப்பட்ட நோக்கத்திற்கு பயன்படும். உதாரணமாக, ஒரு கார்டு சிறந்த உணவக சலுகைகளுக்கும் மற்றொன்று திரைப்பட டிக்கெட்டுகளுக்கான தள்ளுபடிகளுக்கும் பயன்படுத்தப்படலாம். இது உங்கள் செலவினங்களுக்கு ஏற்ப சரியான கார்டை தேர்வு செய்ய உதவுகிறது.பல கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பதன் முக்கிய நன்மைகள்:மேம்படுத்தப்பட்ட கிரெடிட் ஸ்கோர்: பல கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பது, உங்கள் மொத்த கடன் வரம்பை அதிகரிக்கிறது. இது உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை (Credit Utilisation Ratio) குறைக்கிறது. உதாரணமாக, உங்களிடம் ரூ. 1 லட்சம் மொத்த வரம்பு கொண்ட இரண்டு கார்டுகள் இருந்து, நீங்கள் ரூ. 20,000 மட்டுமே பயன்படுத்தினால், உங்கள் பயன்பாட்டு விகிதம் வெறும் 20% ஆக இருக்கும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு மிகவும் நல்லது.சிறந்த வெகுமதிகள் மற்றும் சலுகைகள்: வெவ்வேறு கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பது கேஷ்பேக், பயணத்தின் போது தள்ளுபடி, உணவகங்களில் தள்ளுபடி போன்ற தனித்துவமான பலன்களை வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு வகையான செலவினத்திற்கும் சரியான கார்டை தேர்ந்தெடுத்து அதிக பலன்களைப் பெறலாம்.நீண்ட கடன் வரலாற்றை உருவாக்குதல் (Build a Longer Credit History): பழைய கிரெடிட் கார்டுகளை க்ளோஸ் செய்யாமல் வைத்திருப்பது, உங்கள் கடன் வரலாற்றின் காலத்தை (Credit Age) அதிகரிக்கும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு மிகவும் சாதகமானது. நீண்ட மற்றும் நேர்மறையான கடன் வரலாறு, கடன் வழங்குநர்களுக்கு நீங்கள் நம்பகமானவர் என்பதை புரியவைக்கும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version