இலங்கை
கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய மத்திய ஆரம்ப வித்தியாலயத்திலும்…..!
கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய மத்திய ஆரம்ப வித்தியாலயத்திலும்…..!
தூய்மையான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை, பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கொண்டுசெல்லும் செயற்பாடுகள் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் 09.07.2025 அன்று முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வானது சிற்றி லயன்ஸ் கழக உறுப்பினர்கள் தலைமையில் நடை பெற்றது. இவ் நிகழ்வில் பாடசாலை அதிபர் கேதீஸ்வரன் அவர்களும் கிளிநொச்சி சிற்றி லயன்ஸ் கழக தலைவர் ஜெயசுதர்சன் ஜெயந்தி மற்றும் சிற்றி லயன்ஸ் கழக செயலாளர் விஐயபாலு அவர்களும் சேவை திட்ட உறுப்பினர்களான இ.ஜெயசுதர்சன், த.சேதுபதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் நிகழ்வில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் திருமதி.தயாபரன் சண்முக பிரியா அவர்கள் குழந்தைகள் சுகாதார நலன் பற்றி கலந்துரையாற்றியுள்ளார். அத்துடன் கிளிநொச்சி சின்மிய மிசன் சுவாமிகள் தியானத்தின் நன்மைகளை பற்றி கருத்துரையாற்றியுள்ளார். தியான பயிற்சியில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமாக பங்குபற்றியுள்ளனர்.
நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிரமதான செயற்பாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையில் நடைபெற்ற சிரமதான பணியில் அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.
பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.