இலங்கை

சாராவின் உயிரிழப்பில் வலுவான சந்தேகங்கள்; அமைச்சர் விஜயபால அறிவிப்பு!

Published

on

சாராவின் உயிரிழப்பில் வலுவான சந்தேகங்கள்; அமைச்சர் விஜயபால அறிவிப்பு!

உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவரான, புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மின் உயிரிழந்தமை தொடர்பிலும், அவரின் இறப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையிலும் வலுவான சந்தேகம் உள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
2019 ஏப்ரல் மாதம் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில், ஸஹ்ரான் குழுவின் பிரபல உறுப்பினரான புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மின் உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியது. அதுதொடர்பில் இரண்டு டி.என்.ஏ. (மரபணுப் பரி சோதனை) பரிசோதனைகள் இடம்பெற்றன. அவை இரண்டும் சாரா ஜஸ்மினின் நெருங்கிய உறவினர்களுடன் ஒத்துப்போகவில்லை. மூன்றாவது தடவை சாரா ஜஸ்மினின் தாயுடன் அது ஒத்துப்போயுள்ளது. அப்போது சரத் வீரசேகரவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். இதுதொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட முடியாது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அது தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும். சாரா ஜஸ்மின் உயிரிழந்துவிட்டாரா இல்லையா என்பது தொடர்பிலும் சந்தேகம் உள்ளது. அது தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரித்துவருகின்றனர்- என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version