இலங்கை
சிறப்புமாணிப் பட்டம் விண்ணப்பம் கோரல்!
சிறப்புமாணிப் பட்டம் விண்ணப்பம் கோரல்!
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் முகாமைத்துவக் கற்கைகள் சிறப்புமாணிப் பட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் 3பாடங்களில் சித்திபெற்றிருத்தல். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் ஏதேனும் அடிப்படைக் கற்கைநெறியில் 60 திறமைமட்டத்தினை பூர்த்திசெய்திருத்தல், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் எஸ்.எல்.கியூ.எப் மட் டம் 2இல் 30 திறமை மட்டத்தினைக் கொண்ட ஒரு உயர்தரச் சான்றிதழ் கற்கை நெறியைப் பூர்த்திசெய்திருத்தல், மேலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நடத்தப்படும் தேர்வுப் பரீட்சையிலும் சித்தி பெற்றிருத்தல் கட்டாயமானது.
விண்ணப்பப்படிவங்களை http://www.ou.ac.lk எனும் இணையத்தள முகவரியில் பிரவே சித்து எதிர்வரும் 31ஆம் திகதி வரை விண்ணப்பிக்கமுடியும். மேலதிக விபரங்களிற்கு யாழ்ப்பாணம் பிராந்திய நிலையம், பிறவுண் வீதி, கொக்குவில் எனும் முகவரியூடாகவும் 0212223374 எனும் தொலைபேசியூடாகவும் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கமுடியுமென யாழ்ப்பாணப் பிராந்திய நிலைய உதவிப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.