டி.வி
சீதாவை பாதியில் விட்டுட்டு செல்லும் அருண்… கல்யாண மண்டபத்தில் குழப்பம் செய்யும் முத்து!
சீதாவை பாதியில் விட்டுட்டு செல்லும் அருண்… கல்யாண மண்டபத்தில் குழப்பம் செய்யும் முத்து!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அருண் சீதாவோட அம்மாவைப் பார்த்து எல்லாரும் முத்துவுக்கு மரியாதை கொடுக்கிறீங்க எனக்கு என்ன மரியாதை தாறீங்க என்று கேட்கிறார். அதுக்கு ரவி அருணைப் பார்த்து எதுக்கு இவ்வளவு கோபப்படுறீங்க என்று சொல்லுறார். பின் அருண் தன்ர அம்மாவைப் பார்த்து இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லிட்டு இங்க இருந்து கிளம்பலாம் என்கிறார்.அதுக்கு அண்ணாமலை எதுக்காக அவசரப்படுற என்று கேட்கிறார். மேலும் சீதா ஏற்கனவே உனக்கு பொண்டாட்டி ஆகிட்டா அவளை பாதியில விட்டுட்டு போற மாதிரியே கதைக்கிற என்கிறார். இதனை அடுத்து விஜயா சீதா அம்மாவைப் பார்த்து பொண்ணுங்கள ஒழுங்கா வளர்த்திருந்தால் ஏன் இப்புடி எல்லாம் நடக்கபோகுது என்கிறார். அதைக் கேட்ட ரவி கொஞ்சம் அமைதியாக இருங்க என்று சொல்லுறார். பின் மீனா முத்துவை கல்யாண மண்டபத்திற்கு கூட்டிக் கொண்டு வாறார். அப்ப முத்து குடிச்சிருக்கிறதை பார்த்து அங்கிருந்த எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதனை அடுத்து விஜயா அண்ணாமலையை பார்த்து ஒரு காரணம் கிடைச்சா போதும் உடனே குடிச்சிட்டு வந்திருவான் என்று சொல்லுறார். பின் சீதாவுக்கு அருண் தாலியை கட்டுறார்.அதனை அடுத்து முத்து மீனாவைப் பார்த்து நீ கூப்பிட்டதுக்காக ஒன்னும் நான் வரல சீதா அழுத படியால தான் வந்தனான் என்று சொல்லுறார். பின் முத்து வீட்ட வந்து நான் குடிச்சதுக்கு என்ன பேசுங்க என்கிறார். மேலும் என்ர பொண்டாட்டி என்னை ஏமாத்திட்டால் என்று சொல்லி அழுகுறார். இதுதான் இன்றைய எபிசொட்.