சினிமா
சீரியல் பிரபலம் ஆல்யா மானசா வெளியிட்ட அறிவிப்பு.. ஆவலில் ரசிகர்கள்..!
சீரியல் பிரபலம் ஆல்யா மானசா வெளியிட்ட அறிவிப்பு.. ஆவலில் ரசிகர்கள்..!
தமிழ் சின்ன திரையில் முன்னணி நடிகையான ஆல்யா மானசா தனது புதிய சீரியல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நாயகியாக நடித்து சின்ன திரையில் அறிமுகமான ஆல்யா மானசா, அதில் நடித்த சக நடிகரான சஞ்சீவ் கார்த்தியை காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் இடம்பெற்றது.இதனையடுத்து சில காலமாக சீரியல் பக்கம் எட்டிப் பார்க்காத ஆல்யா மானசா, 2022ஆம் ஆண்டு, ‘இனியா’ சீரியல் மூலம் நாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்தார்.சில காலங்கள் சீரியல்களில் ஆல்யா மானசாவை காணாததால் கவலையடைந்த அவரது ரசிகர்களுக்கு ‘இனியா’ சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தது மகிழ்ச்சியை அளித்தது.அதேவேளை இனியா சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து அவர் ஜீ தமிழில் புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அத்துடன் புதிய சீரியலிற்கான ஆரம்ப பூஜைகளில் கலந்துகொண்ட சீரியல் குழுவினர் எடுத்த புகைப்படங்களை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆல்யா மானசா வெளியிட்ட இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.