பொழுதுபோக்கு

சுற்றி வளைத்த போலீஸ்; அம்மா தப்பிச்சி ஓடிடுங்க, நான் பாத்துக்கிறேன்: வனிதாவுக்கு ஹிண்ட் கொடுத்த ஜோவிகா!

Published

on

சுற்றி வளைத்த போலீஸ்; அம்மா தப்பிச்சி ஓடிடுங்க, நான் பாத்துக்கிறேன்: வனிதாவுக்கு ஹிண்ட் கொடுத்த ஜோவிகா!

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகிகளின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக வனிதா விஜயகுமார் பெயர் இருக்கும். இவர் எதை பேசினாலும் அதில் ஒரு சர்ச்சை சுற்றிக்கொண்டே இருக்கும் என்று நெட்டிசன்களால் அதிகம் வைரலாக்கப்பட்டு வரும். அதே சமயம் எதையும் வெளிப்படையாக பேசும் தைரியம் கொண்டவர் தான் வனிதா.தமிழ் சினிமாவில் 1995-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். தொடர்ந்து ராஜ்கிரனுடன் மாணிக்கம் உள்ளிடட சில படங்களில் நடித்திருந்த இவர், திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகினார். ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்ட வனிதா, மீண்டும் நடிக்கவில்லை என்றாலும் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார்,மேலும் யூடியூப் சேனல்கள், டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த வனிதா குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், பிரஷாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள அவர் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை இயக்கி ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளில் வனிதாவும், அவரது மகளும் படத்தின் தயாரிப்பாளருமான ஜோவிகாவுடன் பங்கேற்று வருகிறார். இதனிடையே பிகைண்ட்வுட்ஸ் சேனலில் வனிதா பங்கேற்ற ஒரு நேர்காணலில், அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயகுமாரின் மகளாக இருந்தாலும் தனது குடும்பத்துடன் வசிக்காமல் தனது மகளுடன் தனியாக வசித்து வரும் வனிதா, தனது குடும்பம் பற்றி பல்வேறு கருத்துக்ளை கூறி வருகிறார்.அந்த வகையில் இந்த நேர்காணலில் பேசிய வனிதா, எனது அம்மா வீட்டில் இருந்து என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸ் வேனில் அழைத்து செல்கிறார்கள். ஆனால் எனது மகள் ஜோவிகா என்னை தனியாக விடமாட்டேன் என்று அவளும் வண்டியில் ஏறிவிட்டாள். வண்டியில் எனது பக்கத்திலேயே நின்றுகொண்டு இருந்தாள். வண்டியில் இருந்து இறங்கும்போது பெண் போலீஸ் வந்துவிட்டார்கள். அப்போது ஜோவிகா எங்கோயோ பார்த்துக்கொண்டு அப்படியே இறங்கி ஓடி போய்டுங்க என்று சொன்னாள்.இது எனக்கு சரியாக புரியவில்லை. அதன்பிறகு அப்படியே இறங்கி ஓடி போய்டுங்க நான் பாத்துக்கிறேன் என்றாள். நான் எங்கு போவேன் நீ என்ன பண்ணுவ என்று கேட்டேன். அதெல்லாம் எனக்கு தெரியும். எந்த எம்பெசிக்கு போகனும் என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும். அப்டியே இறங்கி ஓடிருங்க, ஓடிருங்க என்று சொன்னாள். எனக்கு என்ன பயம் என்றால், அந்த நேரத்தில் அதிகார துஷ்பரயோகம் நடந்தது. என்னை தூக்கிய லாக்கப்பில் போட்டுவிட்டால் என்ன செய்வது என்பதால் அவள் அப்படி சொன்னாள் என்று வனிதா கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version