சினிமா

சூடுபிடித்த Brain Tune விளம்பரம்..! இந்திரஜாவிற்கு விழுந்த பேரடி! எச்சரித்த தமிழக அரசு

Published

on

சூடுபிடித்த Brain Tune விளம்பரம்..! இந்திரஜாவிற்கு விழுந்த பேரடி! எச்சரித்த தமிழக அரசு

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு பெற்றோர்களிடையே தற்போது பெரும் அதிருப்தியை உருவாக்கி இருக்கும் சர்ச்சையான நிகழ்வு ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த சர்ச்சையின் மையக் காரணியாக புகழ்பெற்ற நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா விளங்குகிறார்.இவர் தனது குழந்தையை கொண்டு ஒரு தனியார் play school நிறுவனம் வழங்கும் “Brain Tune Training” என்ற பயிற்சியைப் பற்றி விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “இந்த பயிற்சி மூலம் குழந்தையின் மூளைத்திறனை அதிகரிக்கலாம், நினைவாற்றலை மேம்படுத்தலாம், கணிதம், ஞாபக சக்தி, கற்பனை திறன் போன்றவை விரைவாக வளரக்கூடும்” என கூறப்பட்டிருந்தது.இவ்வாறு அறிவிக்கப்பட்ட இந்த brain tuning training, பொதுமக்களிடையே குழப்பத்தையும், கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மீது நேரடியாக மன அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டு, தவறான எதிர்பார்ப்புகளை உருவாக்குவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்திரஜாவின் அந்த வீடியோ வைரலான பின்னர், சமூக ஊடகங்களில் பலரும் “இது தவறான தகவல் பரப்பல்” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு துறை தற்பொழுது நேரடியாக விளக்கம் அளித்துள்ளது.அதில் குறிப்பிடப்பட்டதாவது, “தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனை திறன் குறைந்துவிட்டது என கூறப்படுவது ஆதாரமற்றது. ஹெகுரு பயிற்சி தொடர்பாக ரோபோ சங்கர் மகள் வெளியிட்ட வீடியோவில் பல தவறான தகவல்கள் இருக்கின்றன.” எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version