இலங்கை

ஜனாதிபதி உத்தரவு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கம் செய்யப்படும்

Published

on

ஜனாதிபதி உத்தரவு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கம் செய்யப்படும்

2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல் மற்றும் டிஜிட்டல்மயமாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Advertisement

 இக்கலந்துரையாடலில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தற்போதுள்ள RAMIS (Revenue Administration Management Information System) கட்டமைப்பை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது மற்றும் தேசிய அளவில் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு,

RAMIS கட்டமைப்பில் தற்போது உள்ள குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் இதற்கான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

செயற்திறன் மிக்க வரி நிர்வாகத்திற்கு டிஜிட்டல் மயமாக்கல் அவசியமானது என இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Advertisement

இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களான, வரி முறைகேடுகளைக் குறைத்தல், வரி முறையை இலகுபடுத்தல், வரி வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான POS (Point of Sale) இயந்திரங்களை அறிமுகப்படுத்துதல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன. 

இந்த நடவடிக்கையின் ஊடாக, நாட்டின் வரி அடிப்படையை விரிவுபடுத்தல், வரி செலுத்தும் செயல்முறையை பொதுமக்களுக்கு மிகவும் இலகுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version