இந்தியா

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.39 கோடியில் 729 வீடுகள்

Published

on

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.39 கோடியில் 729 வீடுகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 38.76 கோடி ரூபாவில் கட்டப்பட்ட 729 வீடுகளைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை உறுதி செய்யப்படும். இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

Advertisement

26 மாவட்டங்களில் உள்ள 67 முகாம்களில் பழுதடைந்த 7 ஆயிரத்து 469 வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. இதில் ஏற்கனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 2 ஆயிரத்து781 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 38.76 கோடி ரூபாவில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளைச் சென்னை தலைமைச் செய்லகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் – என்றுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version