சினிமா

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நோ சொன்ன வேடன்..!

Published

on

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நோ சொன்ன வேடன்..!

கேரளாவின் rap பாடகர் வேடன் இவர் தற்போது பல இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். அவருக்காக உருகி கண்ணீர் விடுவதற்கு ஒரு கூட்டம் சேர்ந்துள்ளது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் பல பாடல்களை பாடி அசத்தும் இவரை தமிழ் சினிமாவில் பாட வைப்பதற்கு பல இயக்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது gs பட இயக்குநர் முந்தியுள்ளார்.அதாவது இயக்குநர் விஜய் மில்டன் கோலி சோடா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளார். அந்த படத்திற்கு காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் என பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக வேடனை கேட்ட போது அவர் மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை எழுதி பாடி தருவதாகவும் கூறியுள்ளார். இதைவிட படத்தில் இவரை நடிக்க வைப்பதற்கான முயற்சிகளில் விஜய் மில்டன் ஈடுபட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version