இலங்கை
தரவுகள் இற்றைப்படுத்தல் யாழ்.மாவட்டம் முன்னிலை!
தரவுகள் இற்றைப்படுத்தல் யாழ்.மாவட்டம் முன்னிலை!
தேசிய ரீதியாகப் புள்ளிவிவரத் தரவுகளை இற்றைப்படுத்தியதில் யாழ். மாவட்டம் முன்னிலை வகித்துள்ளது. என்று யாழ். மாவட்டச் செயலர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவித் தொகை மதிப்பு ஆணையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் தனியார் மண்டபமொன்றில் இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் சாராததரவுகள் என வகைப்படுத்தி இந்த வருடத்தை விவசாயம் சார்ந்த தொகைமதிப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளோம். இந்தத் தரவுகள் தேசிய ரீதியாக மொத்தத் தேசிய வருமானத்தில் மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் பங்களிப்புச்செய்வதால் வகை மற்றும் தொகை ரீதியான இந்த விவரங்கள் உரிய காலத்தில் அல்லது அதற்கு முன்னர் சரியான முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.