இலங்கை
திருக்கோணேஸ்வரர் ஆலய காணி பிடிப்பு நிறுத்தம்
திருக்கோணேஸ்வரர் ஆலய காணி பிடிப்பு நிறுத்தம்
திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாாரின் நேரடி ஆய்வின் பின்னர் கட்டிட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் காணியில் தொடர்பு இல்லாத சிலருடைய அத்துமீறிய கட்டிடப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய தலைவர் வெள்ளை தம்பி சுரேஷ்குமார் உபதலைவர் வைரவநாதன் உட்பட சபையின் உத்தியோகத்தர்கள் அனைவரும் நேற்றைய தினம் (09) அவ்விடத்திற்கு சென்று நிலைமையை ஆராய்ந்து கட்டிடப் பணியை உடனடியாக இடைநிறுத்தியுள்ளனர்.