உலகம்
பிரேசிலில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு!
பிரேசிலில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு!
பிரேசிலில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தனது சமீபத்திய வரிக் கடிதத்தில் இந்தத் திட்டத்தை அவர் அறிவித்தார்.
அதில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பிரேசில் “தாக்குதல்கள்” நடத்தியதாகவும், 2022 தேர்தலை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட முன்னாள் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் பதிலளித்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரேசில் மீதான வரிகள் அதிகரிப்புக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், நாட்டின் நீதித்துறை அமைப்பில் எந்தவொரு தலையீடும் ஏற்படக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை