இலங்கை
பிளாக் காபிக்கு பதிலாக நெய் காபி குடித்தால் இத்தனை நன்மைகளா?
பிளாக் காபிக்கு பதிலாக நெய் காபி குடித்தால் இத்தனை நன்மைகளா?
எல்லோருடைய வாழ்க்கையிலும் காபி என்பது மிகவும் பிடித்த ஒன்றே அதிலும் நெய் காபி உடல் எடையைக் குறைக்க உதவும் நெய் காபி குடிப்பததால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
நெய் காபி ஆங்கிலத்தில் Ghee coffee என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இதை தயாரிப்பது மிக சுலபம். பிளாக் காபியில் நெய் சேர்த்தால் அதுதான் கீ காபி.
நெய்யுடன் காபினை இணைப்பது உங்கள் ஆற்றல் நிலைகளைத் தக்கவைத்து உற்சாகமாக இருக்க உதவுகிறது.
நெய் காபி உங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளதால் நம் மூளையை எப்போதும் அலெர்டாக வைக்க உதவுகிறது.
நெய் காபி நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும் உணர்வை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நெய்யில் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இவை செரிமான செயல்முறையைத் தூண்டவும் மேம்படுத்தவும் உதவுகின்றது.
caffeine, cafestol, kahweol மற்றும் chlorogenic acid நிறைந்திருப்பதால், இந்த நெய் காபி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.