இலங்கை
யாழ்.மாவட்டத்தில் வெள்ளை ஈ கட்டுப்பாடு செயற்றிட்ட விவரங்கள்!
யாழ்.மாவட்டத்தில் வெள்ளை ஈ கட்டுப்பாடு செயற்றிட்ட விவரங்கள்!
யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி இரு வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்தச் செயற்றிட்டத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை சாவகச்சேரியிலும், 17 மற்றும் 18ஆம் திகதிகளில் கோப்பாயிலும், 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் உடுவிலிலும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நல்லூரிலும் மற்றும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணப் பிரதேசத்திலும் 200 தெளிகருவிகள் மூலம் தென்னை மரங்களை கழுவும் செயற்பாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளை ஈயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களையுடையோர் தத்தமது பிரிவு கிராம அலுவலரிடம் பெயரைப் பதிவு செய்யுமாறு தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்தார்.
தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்டச் செயலர் ம. பிரதீபன் தலைமையில் நேற்று நடைபெற்ற போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.