இந்தியா

ரங்கசாமி – ஆளுநர் மோதல்: ‘என்.டி.ஏ கூட்டணி அரசு 5 வருட ஆட்சியை பூர்த்தி செய்யும்’ – புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பேச்சு

Published

on

ரங்கசாமி – ஆளுநர் மோதல்: ‘என்.டி.ஏ கூட்டணி அரசு 5 வருட ஆட்சியை பூர்த்தி செய்யும்’ – புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பேச்சு

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் மோதல் வெடித்துள்ள நிலையில் புதுச்சேரி அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆளுங்கட்சி அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்  இன்று தனியார் உணவகத்தில் நடைபெற்றது.பின்னர் சட்டப்பேரவை வந்த அவர்கள் சபாநாயகர் செல்வத்திடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், புதுச்சேரி மாநில மக்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்ய சிறப்பு சட்டமன்றம் கூட்டம் கூட்ட வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர், எம்.எல்.ஏக்கள் தன்னை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேலும் மாநில அந்தஸ்து வழங்க தீர்மானம் நிறைவேற்றவும் அவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினர். இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேசிவிட்டு அவரது அனுமதி பெற்று உடனடியாக சிறப்பு சட்டமன்றம் கூட்டப்படும் என்று உறுதி அளித்த சபாநாயகர் செல்வம் நிர்வாகத்தில் சிறு சிறு குளறுபடி இருந்தாலும் அதை முதலமைச்சரும், கவர்னரும் சரிசெய்து நிர்வாகத்தை கொண்டு செல்வார்கள்.தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 வருட ஆட்சியை முழுவதுமாக பூர்த்தி செய்யும் இன்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version