இலங்கை
205 பெரும் திட்டங்கள் அரசால் நடைமுறை
205 பெரும் திட்டங்கள் அரசால் நடைமுறை
அரசாங்கத்தால் தற்போது 205 பெரும் அபிவிருத்தித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், அவற்றில் 21 புதிய திட்டங்கள் உள்ளடங்குகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை அண்மையில் அமைச்சரவையால் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், 2025ஆம் ஆண்டில் 145 திட்டங்களை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவதற்குள் 74 திட்டங்கள் பூர்த்திசெய்யப்படவுள்ளன. 24திட்டங்கள் 2026ஆம் ஆண்டிலும், 19 திட்டங்கள் 2027ஆம் ஆண்டிலும், 9 திட்டங்கள் 2028ஆம் ஆண்டிலும் நிறைவுசெய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும் அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் பெளதீக முன்னேற்றம் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்களை அமைச்சரவை ஆய்வு செய்தது. நிதியமைச்சர் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட, இலக்குக் காலப்பகுதிக்குள் இந்த அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.