விளையாட்டு
IND vs ENG LIVE Score, 3rd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்… இந்தியா பவுலிங்
IND vs ENG LIVE Score, 3rd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்… இந்தியா பவுலிங்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, லீட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை 3:30 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தப் இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்துள்ளது. இதனால், இந்தியா பவுலிங் போடும்.