இலங்கை

கிளிநொச்சி கோணாவிலில் நெல் அறுவடை விழா.

Published

on

கிளிநொச்சி கோணாவிலில் நெல் அறுவடை விழா.

கிளிநொச்சி – கோணாவில் வயல் பகுதிகளில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் அறுவடை விழா இன்று (11) இடம்பெற்றது. 

 

Advertisement

காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய நாற்று நடும் இயந்திரம் மூலம் AT362 நெல் வர்க்கம்  நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. 

 

விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்

Advertisement

இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்டது. 

 

நெல் அறுவடை நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன ,வடமாகாண விவசாய மேலதிக பணிப்பாளர் த.யோகேஸ்வரன், காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் வடமாகாண  பணிப்பாளர் A.C.பாபு,யாழ் பல்கலைக்கழக விவசாய பீட பண்ணை முகாமையாளர்,  ,விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ,காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் உத்தியோகத்தர்கள் ,விவசாய அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version