இந்தியா
செயற்கைகோள் வழியான இணைய சேவைக்கு இந்தியா அனுமதி.
செயற்கைகோள் வழியான இணைய சேவைக்கு இந்தியா அனுமதி.
இந்தியாவில் செயற்கைகோள் வழியாக இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முதற்கட்ட அனுமதி வழங்கிய நிலையில், விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான ‘இன்ஸ்பேஸ்’ தற்போது 05 வருடங்களுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் 600 ஜிகாபைட்ஸ் செயற்றிறனை வழங்கும் திறன்கொண்ட ஸ்டார்லிங்க், செயற்கைக்கோள் வழி இணையசேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் மாதம் சுமார் 3,000 ரூபா முதல் 4,200 ரூபா வரை கட்டணம் செலுத்த நேரிடும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சேவை பயன்பாட்டுக்கு தேவையான உபகரணங்களின் விலை சுமார் 30,000 ரூபா முதல் 35,000 ரூபா வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலதிபரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைகோள் அடிப்படையில் பல நாடுகளுக்கு இந்த இணைய சேவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.