இலங்கை
‘அருண’வான அநுர; ட்ரம்பின் விளையாட்டு!
‘அருண’வான அநுர; ட்ரம்பின் விளையாட்டு!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இலங்கைக்கான வரிவிதிப்புத் தொடர்பில் வெளியிட்ட கடித்தில், இலங்கை ஜனாதிபதியின் பெயரை ‘அருணகுமார்’ என்று தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு 30 வீதமான வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார். இதற்காக அவர் வெளியிட்டுள்ள கடிதத்திலேயே; இலங்கை ஜனாதிபதியின் பெயரை ‘அருணகுமார’ என்று தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் அவர் ஜனாதிபதியின் பெயரை சரியாகக் குறிப்பிட்டு மீண்டும் அந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும், இலங்கை அமெரிக்காவின் அசாதாரண பொருளாதாரம் எனவும் அந்தக் கடிதத்தில் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.