பொழுதுபோக்கு

அவரே ஃபுல் காமெடி பண்ணிடுவாரு… நீ என்ன பண்ற அங்க? செந்திலிடம் கேட்ட கவுண்டர்: ரஜினி சொன்ன உண்மை!

Published

on

அவரே ஃபுல் காமெடி பண்ணிடுவாரு… நீ என்ன பண்ற அங்க? செந்திலிடம் கேட்ட கவுண்டர்: ரஜினி சொன்ன உண்மை!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நகைச்சுவை காம்போ கவுண்டமணி-செந்தில் குறித்த சுவாரஸ்யமான உண்மை ஒன்றை ரஜினிகாந்த் கூறினார். திரையுலகில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ரஜினி, இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் கவுண்டமணி – செந்தில் கூட்டணியின் வெற்றி ரகசியத்தை தனது பாணியில் எடுத்துரைத்தார்.கவுண்டமணி – செந்தில் கூட்டணி, 80கள் மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் பெரும் ஆதிக்கம் செலுத்திய நகைச்சுவை காம்போ. பல வெற்றிப் படங்களில் இவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக அமைந்தன. இவர்களது நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போதும், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்போதும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கவுண்டமணி – செந்தில் நடித்துள்ளனர். ஒவ்வொரு காட்சியிலும் தங்களின் தனித்துவமான பாணியால் ரசிகர்களைக் கவர்ந்தனர். அவர்களது காமெடி வெறும் சிரிப்புக்கு மட்டும் இல்லாமல், அதில் தனித்தன்மை, யதார்த்தம் மற்றும் சமூக விமர்சனமும் அடங்கி இருக்கும்.லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் லால் சலாம். இந்த படம் பிப்.9ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். ஆனால் 45 நிமிடங்கள் வரை ரஜினி வரும் காட்சிகள் உள்ளது. இதுதவிர மாஸ் சண்டை காட்சிகளில் ரஜினி நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தான்யா பாலகிருஷ்ணா, தம்பி ராமையா, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் செந்திலும் நீண்ட நாட்களுக்கு பின் நடித்துள்ளார். வயது முதுமை காரணமாக, கவுண்டமணி-செந்தில் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டனர். இதில், ரஜினி படம் என்பதால், லால் சலாம் படத்தில் செந்திலும் ஆர்வமாக நடித்துள்ளார்.இதுகுறித்து லால் சலாம் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில், பேசிய நடிகர் ரஜினிகாந்த், கவுண்டமணி-செந்தில் குறித்த சுவாரஸ்யமான உண்மை ஒன்றை கூறினார். ஒருமுறை வீரா படப்பிடிப்பின்போது, அப்படத்தில் நடிக்க செந்தில் ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பின்போது செந்திலுக்கு கவுண்டமணியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது பேசிய, செந்தில் ரஜினி அண்ணே படத்தில் நடித்துக்கொண்டிருப்பதாக கூறினார். அதற்கு கிண்டல் பாணியில் பேசிய கவுண்டமணி, அவரே(ரஜினிகாந்த்) காமெடி பண்ணிடுவார், நீ என்ன பண்ற அங்க? என்று கேட்டதாக கூறி ரஜினிகாந்த் நினைவுபடுத்தினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version