இலங்கை
இலங்கை மீதான அமெரிக்க வரி – அநுரவின் அறிவிப்பு!
இலங்கை மீதான அமெரிக்க வரி – அநுரவின் அறிவிப்பு!
இலங்கை இறக்குமதிகள் மீது அமெரிக்கா விதித்த 30% வரியை மேலும் குறைக்க இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வரி நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ள 9 ஆம் திகதி வரை தொடருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வரிகள் குறித்து இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போது போது அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் (ஜூலை 9) அமெரிக்க ஜனாதிபதி இலங்கை மீது விதித்த 30% வரியை மேலும் குறைக்க ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை சிறிது நேரம் இருப்பதால், அந்தக் காலகட்டத்தில் இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்களை தொடருமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, முன்னர் விதிக்கப்பட்ட 44% வரியை 30% ஆகக் குறைக்க அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுர நன்றி தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், 44 வீத வரியை விதிப்பதாக ஏப்ரல் 2 ஆம் திகதி ட்ரம்ப் முதலில் அறிவித்திருந்த போதிலும், நேற்று இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் அந்த எண்ணிக்கையை 30 வீதமாகமாக குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.