இலங்கை
இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி ; கடல் உணவில் பாரிய தாக்கம்
இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி ; கடல் உணவில் பாரிய தாக்கம்
இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரி, பிராந்திய ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பிடும் போது, உள்ளூர் கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என, இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தமது கடல் உணவுகளில் சுமார் 25 வீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா குறைந்த வீதத்திலான வரியை அறிவித்துள்ளதால், அது இலங்கையின் கடலுணவு ஏற்றுமதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, பிராந்திய ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு இலங்கைக்கான வரியை மேலும் குறைக்க, 2025 ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.