இலங்கை
உள்நாட்டு பால்மா விலையில் அதிகரிப்பா? வெளியான புதிய அறிவிப்பு
உள்நாட்டு பால்மா விலையில் அதிகரிப்பா? வெளியான புதிய அறிவிப்பு
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபாய தெரிவித்தார்.
எதிர்கால சந்தை நடவடிக்கைகளைக் கண்காணித்ததன் பின்னரே மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் பால்மாவின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதனால் இறக்குமதி செய்யப்படும், 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாயினால் அதிகரிப்பதற்கு நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.