உலகம்

ஐக்கிய நாடுகள் சபை நிபுணருக்கு தடை விதித்த அமெரிக்கா

Published

on

ஐக்கிய நாடுகள் சபை நிபுணருக்கு தடை விதித்த அமெரிக்கா

காசா மற்றும் மேற்குக் கரை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸை அமெரிக்கா தடை செய்துள்ளது.

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்று வெளிப்படையாகக் கூறி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் இத்தாலிய மனித உரிமை ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான அல்பானீஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

Advertisement

அண்மையில் அவர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்த அறிக்கையில் காசா இனப்படுகொலையை வைத்து உலகளாவிய பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் எதிராக “அரசியல் மற்றும் பொருளாதாரப் போருக்குப் பிரச்சாரம் செய்வதாக” குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.

இதன்மூலம் அமெரிக்காவில் அல்பானீஸ் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களும் முடக்கப்படுகின்றன. மேலும் அவர் நாட்டிற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version