இலங்கை
ஓட்டோ கவிழ்ந்து முதியவர் இறப்பு!
ஓட்டோ கவிழ்ந்து முதியவர் இறப்பு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் ஓட்டோவொன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்டைதீவு நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆசீர்வாதம் கஜகிறிஸ்தோபர் (வயது-84) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
அண்மையில் பூநகரிக்குச் செல்லும் போது சாவகச்சேரி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சையின்போது நேற்று உயிரழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன்ட் தயான் அன்ரலா மேற்கொண்டார்.